கிடுகிடுவென தொப்பையை குறைக்க வேண்டுமா? இதோ வீட்டு வைத்தியம்!

life-style-health
By Nandhini 1 வருடம் முன்

உண்மை என்னவெனில் தொப்பையை குறைப்பது மிக எளிமையான ஒன்று தான். ஆனால் இதற்கான சரியான வழிகளை பலர் தேர்ந்தெடுப்பது கிடையாது.

இது தான் ஒருவரின் தொப்பையை குறைக்க விடாமல் பெருத்து போக செய்கிறது. உட்கார்ந்த இடத்திலே வேலை செய்வது, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்பது, சரிவர தூங்காதது, உடலுக்கு வேலை கொடுக்காதது, மது அருந்துவது போன்ற பல காரணங்களால் தொப்பை வர வாய்ப்புள்ளது.

அதாவது ஒல்லியான உருவத்துடன் இருப்பர்களுக்கும் தொப்பை பெரியதாக இருக்கும். தோற்றத்தில் குண்டாக இருப்பவர்களுக்கு கூட தொப்பை தனியாக தெரியாது. ஒல்லியான தேகத்தை கொண்டவர்களுக்கு தொப்பை ஒரு பெரிய பிரச்சனை தான். அழகிற்காக மட்டும் சொல்லப்படவில்லை.

தொப்பையை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. டயட் என்ற பெயரில் நாள் முழுவதும் தங்களுடைய சாப்பாட்டு முறையை கவனமாக பார்த்து வருவார்கள். ஆனால் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் அவர்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது.

ஒரு நாள் முழுவதும் வைத்திருந்த உணவு கட்டுப்பாட்டினை, அந்த நாள் முடிவில் மொத்தமாக வீணாக்கி விடுவார்கள்.

சிட்ரஸ் பழங்கள்

பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

துளசி

துளிசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. அதிகமான கார்டிசோல் அளவு கீழ்வயிற்றில் அதிகமான கொழுப்பு சேரச் செய்கிறது. எனவே இந்த துளசி இலைகளை சாப்பிடும் போது கொழுப்பை எளிதாக குறைக்கலாம்.

புதினா

புதினா அதன் இனிப்பு வாசனையால் நிறைய உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இவை நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. எனவே புதினா தேநீர் அருந்தி வந்தால் நல்ல விதத்தில் கொழுப்பை கரைக்க முடியும்.

எலுமிச்சை மற்றும் பூண்டு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் 4 பல் பூண்டு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது வேகமாக தொப்பையை குறைக்கும் ஒரு நல்ல மருந்து.

கிரீன் டீ

தினமும் நாம் குடிக்கும் வழக்கமான டீ காபிக்கு பதில் கிரீன் டீயை அருந்த வேண்டும். இப்படி செய்தால் மிக விரைவில் உங்கள் தொப்பை குறைய ஆரம்பித்து விடும்.

உணவு மாற்றம்

தொப்பை குறைய உணவில் அதிகமாக கீரைகள் காய்கறிகள் பழங்கள் சேர்த்து கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.

இஞ்சி நீர்

ஒரு கப் சூடு தண்ணீரில் சிறிது இஞ்சியை சேர்த்து கொதிக்க வைத்து, தினமும் குடித்து வந்தால் மிக விரைவாக தொப்பை குறையும்.