இனி வார விடுமுறை வெள்ளிக்கிழமை தான்.. அப்போ ஞாயிறு? அதிர்ச்சி தகவல்!
வார விடுமுறையை ஞாயிற்று கிழமையில் இருந்து மாற்ற யோசனை நடைபெற்று வருகிறது.
வார விடுமுறை
அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ என்ட் எம் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், பெரும்பாலான அலுவலக ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில் மிகவும் சோர்வாக செயல்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை மற்றும் மதிய நேரங்களில் தங்களது வேலைகளில் தவறு செய்கின்றனர். ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 31, 2018 வரையிலான இரண்டு வருட காலப்பகுதியில் 89 அலுவலக ஊழியர்களின் கணினி பயன்பாட்டு அளவீடுகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வு தகவல்
அதிலும், வெள்ளிக்கிழமை பணிகளில் தட்டச்சு வேகம், தட்டச்சு பிழைகள் மற்றும் மவுஸ் செயல்பாடு போன்றவற்றில் தவறு ஏற்பட்டுள்ளது. இதனால் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை வழங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேராசிரியர் ரோஹ் கூறுகையில்,
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அனைத்து ஊழியர்களும் மிகவும் குறைந்த நேரத்தில் வேலையை செய்து முடித்து விடுகின்றனர். ஆனால் வெள்ளிக்கிழமை நாளில் இந்த செயல்திறன் ஊழியர்களிடம் குறைந்தே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அலுவலங்கங்களில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமைகளில் விடலாம் என்று பலரும் யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.