விடுமுறை அளிக்காமல் வேலை வாங்குவது பாவம் - மாடுகளுக்கு வார விடுமுறை அளிக்கும் கிராம மக்கள்..!

Jharkhand
By Thahir Mar 29, 2023 02:06 AM GMT
Report

ஜார்கண்ட்டில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள கிராமங்களில் உள்ள மாடுகளுக்கு வார விடுமுறை அளிக்கும் வழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது.

மாடுகளுக்கு வார விடுமுறை 

ஜார்க்கண்ட் மாநிலம் லடேஹர் அருகிலுள்ள சக்லா பஞ்சாயத்துக்கு உட்பட்ட துரிசோத் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள பசுக்கள், கறவை எருமை மாடுகளுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

Villagers giving cows a week off

அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மாடுகளை தினந்தோறும் வேலை வாங்குவதாலும் பால் கறப்பதாலும் அவை சோர்ந்து விடுகின்றன.

இதையடுத்து அவற்றுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளித்து வருவதாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

விடுமுறையின்றி வேலை வாங்குவது பாவம் 

இப்பகுதி அம்மக்கள் தெரிவிக்கையில், மாடுகளுக்கு விடுமுறை வழங்கும் வழக்கம் நுாற்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளது. பழங்குடி மக்கள் வியாழக்கிழமை கால்நடைகளிடம் வேலை வாங்குவது கிடையாது.

பிற மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கால்நடைகளுக்கு விடுமுறை வழங்குவார்கள் எத்தனை அவசரமாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாடுகளை வேலை வாங்குவது கிடையாது. மாடுகளுக்கு விடுமுறை அளிக்காமல் வேலை வாங்குவது பாவம் என்கின்றனர் கிராம மக்கள்.