கஞ்சாவிற்காக... சுற்றுலாப் பயணிகளால் தத்தளிக்கும் தாய்லாந்து!
தாய்லாந்தில் கஞ்சா விற்பனையை சட்டபூர்வமாகிய நிலையில் அந்த நாட்டின் சுற்றுலா துறை மிக பெரிய ஏற்றத்தை கண்டுள்ளது.
தாய்லாந்துதான்...
தென்கிழக்கு ஆசியாவில் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்துதான். 4 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டபூர்வமாகிய தாய்லாந்து இந்த ஆண்டு முதல் அதனை பயிரிடுவது மற்றும் பிரித்தெடுத்தலுக்கு இருந்த தடையை நீக்கியுள்ளது.

சுற்றுலாவுக்காக தாய்லாந்துக்கு சர்வதேச நாடுகளில் இருந்து மக்கள் வருவதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலா மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை
அதாவது, கஞ்சா தொடர்பான தாய்லாந்து கொள்கையின் தாக்கம் அந்நாட்டின் சுற்றுலாத்துறையில் உடனடியாக எதிரொலித்தது. தாய்லாந்தில் சுற்றுலாத்துறையின் மதிப்பு 52.63 பில்லியன் என்ற அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான மிகப்பெரிய ஆதரவு கொடுத்த தாய்லாந்து நாட்டின் சுகாதார அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், ஐந்து ஆண்டுகளில் சந்தை 3 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
கஞ்சா விற்பனை
தாய்லாந்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, நாட்டில் அனைவராலும் வரவேற்கப்படுகிரது. ஆனால், தங்கள் நாட்டின் கஞ்சா தளர்வுக் கொள்கையானது மருத்துவ நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது இல்லை என்றும் தாய்லாந்தின் சுற்றுலா ஆணையம், தெரிவித்துள்ளது.
தற்போது கஞ்சா விற்பனை செய்யும் கடைகளுக்கான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் புதிய மசோதா குறித்து தாய்லாந்தில் தற்போது விவாதங்கள் தொடங்கியுள்ளன.