அரைகுறை ஆடையில் அதிகாரியின் மகள்; வெடித்த சர்ச்சை - வைரலாகும் திருமண வீடியோ!

Viral Video Marriage Iran
By Sumathi Oct 22, 2025 05:05 PM GMT
Report

அதிகாரியின் மகள் திருமண வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமண வீடியோ

ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வழிநடத்திச் சென்ற அலி ஷாம்கனியின் மகளின் திருமணம் 2024-ஆம் ஆண்டில் நடந்தது.

iran

அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஷாம்கனியின் மகள் ஃபாத்திமா, தெஹ்ரானில் உள்ள உயர்தர ஆடம்பரமான எஸ்பினாஸ் பேலஸ் (Espinas Palace) ஓட்டலில் நடந்த திருமண விழாவிற்கு அழைத்து வரப்படுகிறார்.

அப்போது மணமகள் ஃபாத்திமா முகம் முழுவதும் தெரியும் வகையிலும், கைப்பகுதி மறைக்கப்படாமலும் வெள்ளை நிற கவுன் அணிந்திருக்கிறார். உடலை அரைகுறையாக மறைத்த ஆடையுடன் நடந்து வருகிறார்.

66 வயதில் 10வது குழந்தை பெற்ற பாட்டி - மிரண்ட மருத்துவர்கள்!

66 வயதில் 10வது குழந்தை பெற்ற பாட்டி - மிரண்ட மருத்துவர்கள்!

வெடித்த சர்ச்சை

ஷாம்கனியின் மனைவியும் (மணமகளின் தாயார்) நீல நிற கவுனை அணிந்தபடி, முதுகுப் பகுதி தெரியும் வகையிலான ஆடையை அணிந்துள்ளார். அவரும் ஹிஜாப் அணியவில்லை. ஹிஜாப் கட்டாயம் என சட்டம் நடைமுறையில் உள்ள ஈரானில்,

மணமகள் மற்றும் அவருடைய தாயார் இருவரும் மேற்கத்திய பாணியிலான ஆடைகளை அணிந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீடியோ விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அலி ஷாம்கனி 2024 ஏப்ரலில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இஸ்ரேல் தான் கசியவிட்டுள்ளது. இது தனியுரிமை மீறல் என தெரிவித்துள்ளார்.