முடிவுக்கு வந்த 70 வருட நடைமுறை - இனி இந்தியர்களுக்கு பிரச்சனையே இல்லை
கஃபாலா முறை நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கஃபாலா முறை
சவுதி அரேபியாவில் பல லட்சம் வெளிநாட்டினர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் அங்குக் கடந்த 70 ஆண்டுகளாக அமலில் இருந்த சர்ச்சைக்குரிய கஃபாலா முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், சுமார் 1.3 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
நீக்கிய அரசு
'கஃபாலா' என்ற அரபுச் சொல்லுக்கு 'ஸ்பான்சர்ஷிப்' என்று பொருள். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடியுரிமை, வேலைவாய்ப்பு மற்றும் சட்டப்பூர்வ அந்தஸ்து ஆகியவை குறித்து இந்த ஸ்பான்சரே முடிவு செய்வார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஸ்பான்சரின் அனுமதியின்றி வேலை மாறவோ, வெளிநாடு செல்லவோ முடியாது. எனவே, இதனை நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.