இந்த நாளில்தான் சிங்கிள்ஸ் அதிகமாக ஃபீல் பண்றாங்களாம்,, ஆய்வில் அதிர்ச்சி தகவல்
காதலர் தினத்தை விட, சிங்கிள்ஸ் தனிமையை உணரும் நாள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கிள்ஸ் தனிமை
டேட்டிங் டாட் காம் நடத்திய ஆய்வின்படி அமெரிக்காவில் 59% பேருக்கு ஹாலோவீன் தினம், ஆண்டின் மிக உணர்ச்சி ரீதியான கடினமான நாளாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சிலர் இதை காதலர் தினத்தை விட வேதனையும் தனிமையும் அதிகம் இருக்கும் நாளாகக் கூறியுள்ளனர்.
ஹாலோவீன் தினம்
இந்தத் தினத்தில் தங்களுக்கான உடைகள் இல்லாமல், துணை இல்லாமல், குடும்பப் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்கள் இல்லாமல் அவர்களின் மனநிலை மிகவும் தனிமை உணர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடகங்கள் அவர்களின் தனிமையை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அங்கே பகிரப்படும் புகைப்படங்களாலும் அல்லது சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளதாகப் பலர் தெரிவித்துள்ளனர். இது கொரோனா பிந்தைய காலங்களில் மேலும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.