2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது? என்ன காரணம்!

United States of America India Citizenship
By Sumathi Oct 18, 2025 06:11 PM GMT
Report

2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

க்ரீன் கார்டு 

அமெரிக்க அரசின் சலுகைகளைப் பெற உதவும் க்ரீன் கார்டுகளை பிற நாட்டவர்கள் பெறுவதில் பல விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

green card

குறிப்பாக, க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள், அமெரிக்கா குறித்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்டவை அடங்கிய கடுமையான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக உள்ளது.

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கழிச்சுக்கலாம்; திருமணத்தை நிறுத்திய பெண் - இளைஞர் ஷாக்!

காரணம் என்ன?

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவுக்கு குடியேறியுள்ளனரோ, அந்நாடுகளுக்கு க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2029 வரை அமெரிக்காவில் இந்தியர்கள் க்ரீன் கார்டு கிடையாது? என்ன காரணம்! | America Issues Green Card Ban For Indians Reason

அதன்படி, இந்தியர்கள் 2029-ஆம் ஆண்டு வரை அமெரிக்க க்ரீன் கார்டு பெற முடியாது என கூறப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு மட்டுமே இந்தியாவிலிருந்து ஒன்றே கால் லட்சம் பேர் அமெரிக்காவுக்கு குடியேறிய நிலையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடையால் பிற விசாக்கள் மூலம் மட்டுமே இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லும் நிலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.