2 வருஷமா 1,000 இலவச உணவுகளை ஏமாற்றி சாப்பிட்ட நபர் - ஆர்டர் செய்தது எப்படி?
இரண்டு ஆண்டுகளில் ஆப் மூலம் 1,000 இலவச உணவுகளை நபர் ஒருவர் சாப்பிட்டுள்ளார்.
இலவச உணவு
ஜப்பான், நகோயா பகுதியைச் சேர்ந்தவர் ஹிகாஷிமோட்டோ(38). இவர் பிரபலமான உணவு விநியோக ஆப் ஆன டெமே-கேனில் இரண்டு ஆண்டுகளாக தினமும் ஈல் பென்டோ,
ஹாம்பர்கர் ஸ்டீக் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற விலையுயர்ந்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு முறையும், அவர் ஆப் இல், எனது ஆர்டர் வரவில்லை, என்று புகார் கூறுவார்.
புகாரை அடுத்து நிறுவனமும் அவருக்கு முழுத் தொகையையும் திருப்பித் தரும். இதன்மூலம், இரண்டு ஆண்டுகளில் 3.7 மில்லியன் யென் (தோராயமாக ₹2.1 மில்லியன்) இழப்பு ஏற்பட்டது.
ஏமாற்றிய நபர்
124 போலி கணக்குகளை உருவாக்கி ஒவ்வொரு முறையும் புதிய பெயர், தவறான முகவரி மற்றும் போலி ஆவணங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு ப்ரீபெய்ட் சிம் கார்டைப் பயன்படுத்தி வந்தார்.
இதில் ஒருமுறை சந்தேகித்த நிறுவனம் நடத்திய விசாரணையில், இதை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல, 1095 முறை செய்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து நிறுவனம் உடனடியாக இது குறித்து போலீசில் புகார் அளித்தது. பின் அவர் கைது செய்யப்பட்டார்.