புதிய நிலவு கண்டுபிடிப்பு;எந்த கிரகத்தில் தெரியுமா? எப்படி இருக்கு பாருங்க..
யுரேனஸ் கிரகத்தை சுற்றிவரும் புதிய நிலவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய நிலவு
சூரியனிலிருந்து மிக தொலைவில் யுரேனஸ் கிரகம் அமைந்துள்ளதால் இது மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும். இதில் சுமார் 10 கிலோமீட்டர் விட்டமே கொண்ட ஒரு சிறிய நிலவு,
யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி வருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, உலகின் மிக சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் இந்த புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நாசா தகவல்
40 ஆண்டுகளுக்கு முன் யுரேனஸை கடந்து சென்ற வாயேஜர்-2 விண்கலத்தால் கூட இந்த நிலவை கண்டறிய முடியவில்லை. யுரேனஸில் இருந்து 56 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில், இது 14ஆவது நிலவாக சுற்றி வருகிறது.
இந்த புதிய நிலவு, யுரேனஸ் கிரகத்தின் ஈர்ப்பு விசை மற்றும் அதன் உள் அமைப்புகள் குறித்த ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும், இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சர்வதேச வானியல் சங்கம் விரைவில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரங்களில் ஒன்றின் பெயரைச் சூட்டும் என நாசா தெரிவித்துள்ளது.