பூமிக்கு அடியில் 10-20 டன் தங்கம் கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?
பூமிக்கு அடியில் 10-20 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10-20 டன் தங்கம்
ஒடிசா மாநிலத்தில் தியோகர், நபரங்பூர், கியோன்ஜர், அங்குல் மற்றும் கோராபுட் மாவட்டங்களில் இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு நடத்தி வருகிறது.
அதில் சுமார் 10 முதல் 20 டன் தங்கம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தியோகரில் தங்க வைப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
விரைவில் ஏலம்?
இதனைத் தொடர்ந்து சுந்தர்கர், நபரங்பூர், கியோஞ்சர், அங்குல் மற்றும் கோராபுட் ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தியோகரில் உள்ள முதல் தங்கச் சுரங்கத் பகுதியை ஏலம் விடுவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன.
புவியியல் குறிகாட்டிகளின் அடிப்படையில், இருப்புக்கள் 10 முதல் 20 மெட்ரிக் டன்கள் வரை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இது இந்தியாவின் தங்க இறக்குமதி அளவுகளுடன் ஒப்பிடும்போது மிதமானதாக இருந்தாலும், கணிசமான அளவு என்று ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.