சட்டையைக் கிழித்து அட்ராசிட்டி.. கண்டித்த போலீஸைக் கடித்து வைத்த நடிகை!

India Gossip Today
1 மாதம் முன்

பெண் போலீஸின் கையைக் கடித்த நடிகையால் பரபரப்பு ஏற்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெப் சீரிஸ் நடிகை

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் ககோலி விஸ்வாஸ் (28). வெப் சீரிஸ் நடிகையான இவர், படப்பிடிப்புக்காக  புனே சென்றார்.

pune

அங்கு, வட்கான்ஷெரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆன்லைன் மூலம் அறை முன்பதிவு செய்திருந்தார். அங்கு சென்று பார்த்தபோது, அவருக்கு அறை வசதியாக இல்லை என்பது தெரியவந்தது.

வாக்குவாதம்

இதனால் ஓட்டல் நிர்வாகத்திடம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். ஆனால், அவர்கள் பணத்தைத் திரும்ப தர மறுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

web series

பின்னர் ஓட்டல் எதிரே சாலைக்கு வந்த ககோலி விஸ்வாஸ், அங்கு நின்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. அங்கு சென்றவர்களுக்கும் அவர் தொல்லைக் கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி

இதைக் கேள்விபட்டு அங்கு வந்த புனே மகளிர் போலீஸார், சாலையில் இருந்து ஓரமாக அழைத்துச் சென்று சமாதானம் செய்து வைக்க முயன்றனர். அப்போது கோபமான நடிகை ககோலி, திடீரென தனது மேல் சட்டையை கிழித்தார்.

பிறகு பர்வீன் ஷேக் என்ற பெண் போலீஸைத் தாக்கிவிட்டு, அவர் கைவிரலைக் கடித்தார். அவருடைய மூக்குக் கண்ணாடியையும் சேதப்படுத்தினார். பெண் கைது இதனால் அதிர்ச்சியடைந்த பர்வீன் ஷேக், இதுகுறித்து புகார் செய்ததை அடுத்து,

 கைது

நடிகை ககோலி கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் கையைக் கடித்ததால், நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முகப்பரு..முகத்தில் ஊசியால் குத்திய ஆசிரியை - உயிரிழந்த மாணவன்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.