சென்னை உள்ளே வரும் மேக கூட்டங்கள்; நீண்ட கடும் மழை உள்ளது - வெதர்மேன் எச்சரிக்கை

Tamil nadu Kanchipuram Chennai TN Weather
By Karthikraja Oct 15, 2024 11:49 AM GMT
Report

சென்னைக்கு கடுமையான மழை வர உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

சென்னை கனமழை

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

chennai rains

இதனையடுத்து சென்னைக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள், அத்தியாவசிய சேவை அல்லாத பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை(16.10.2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

தொடரும் கனமழை - பள்ளி கல்லூரிகளுடன் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

தொடரும் கனமழை - பள்ளி கல்லூரிகளுடன் அரசு அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வெதர்மேன் எச்சரிக்கை

இந்நிலையில் சென்னையில் பெய்ய உள்ள மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "யாரையும் பயமுறுத்த இந்த பதிவு இல்லை. அலுவலகத்திற்கு வந்தவர்கள் சீக்கிரம் கிளம்பலாம். சென்னை கடற்கரைக்கு வெளியே திரண்டுள்ள கடுமையான மேகங்கள் ஒருங்கிணைத்து, தீவிரமடைந்து நகருக்குள் செல்ல தயாராக உள்ளன.

chennai rains

அடுத்த சுற்று மிகவும் கடுமையான மழையை சென்னைக்கு கொண்டு வரும். சென்னையில் கடந்த 6 மணி நேரத்தில் மட்டும் சில இடங்களில் 150 மி.மீட்டரை தாண்டியுள்ளது.வரவிருக்கும் மழை நீண்டதாகத் தெரிகிறது, மேலும் நள்ளிரவில் இருந்து குறிப்பாக வட சென்னையிலிருந்து 250 மிமீயைத் தாண்டும். இரவு நெருங்கும் போது, ​​மேகங்கள் மேலும் வலுவடையும். 

போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அப்பார்ட்மென்ட்ல தண்ணிக்கு மோட்டார் போட்டு வெச்சுக்கோங்க. முற்றிலும் தேவைப்படாவிட்டால் வெளியே வர வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.