அடுத்த 3 நாட்கள்.. வானிலையே மாறப்போகுது - வெதர்மேன் எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Weather
By Sumathi Nov 16, 2022 05:46 AM GMT
Report

ஒரு வாரத்திற்கான வானிலை மாற்றங்கள் குறித்து தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை

தமிழ்நாடு வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்யும்.

அடுத்த 3 நாட்கள்.. வானிலையே மாறப்போகுது - வெதர்மேன் எச்சரிக்கை! | Weather Of Tamilnadu A Weathermans Warning

அதன்பின் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும். முக்கியமாக உங்கள் வாகனங்களில் பனியை கூட நீங்கள் பார்க்க முடியும். பள்ளி செல்லும் மாணவர்கள் விடுமுறை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.

வெதர்மேன் தகவல்

அதற்கு வாய்ப்பு குறைவுதான். குன்றத்தூர் தவிர மற்ற பகுதியில் கொஞ்சம் கஷ்டம்தான். தெற்கு தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். கொங்கு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

அடுத்த மழை 20ம் தேதி வாக்கில் தொடங்கும். ஒன்று இரண்டு நாட்கள் முன் பின் இருக்கலாம். காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கே உருவாகலாம். அது வலிமை குறைந்த சூறாவளியாகவோ அல்லது தாழ்வு பகுதியாகவோ மாறலாம்.

இந்த சீசனில் நம்மை தாக்க போகும் முதல் சக்கரம் இது என்றும் கூறலாம். ஆனால் அதை பற்றி முழுமையான அப்டேட்களை தெரிந்து கொள்ள இன்னும் நாட்கள் இருக்கின்றன, என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.