தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - எந்தெந்த இடங்கள் தெரியுமா?

Tamil nadu TN Weather Cyclone
By Vidhya Senthil Dec 24, 2024 12:30 PM GMT
Report

 வளி மண்டல கீழடுக்கு காரணமாக தமிழகம், மற்றும் புதுவையில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

காற்றழுத்த தாழ்வு பகுதி

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (டிச.24) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

எது வந்தாலும் சமாளிக்கத் தயார் நிலையில் உள்ளோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

எது வந்தாலும் சமாளிக்கத் தயார் நிலையில் உள்ளோம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மழைக்கு வாய்ப்பு

மேலும் இது, மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வழுவிழக்கக் கூடும். லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இதன் காரணமாக, டிச.24,. டிச.25,டிச.26,டிச.27,டிச.28,டிச.29 வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.