நடுக்கடலில் உயிருக்குப் போராடும் எருமை மாடு - நெஞ்சை உலுக்கும் காட்சிகள்!
நடுக்கடலில் 6 நாட்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் எருமை மாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெஞ்சல் புயல்
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அதி கனமழையால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அதில் குறிப்பாகக் கடலூர் வெள்ளி கடற்கரை முகத்துவாரம் அருகே கடந்த வாரம் 32 எருமை மாடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
எருமை மாடு
மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எருமைமாடுகளின் நிலை குறித்து என்னவென்று தெரியாத சூழல் இருந்தது. தற்பொழுது சமூகவலைதத்தில் ஒரு எருமை மாடு நடுக் கடலில் தத்தளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாழங்குடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.அப்போது நடுக்கடலில் தத்தளித்த ஒரு எருமை மாட்டைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.