காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கிழித்து குப்பையில் வீசப்படும் - ராகுல் காந்தி உறுதி!

Indian National Congress Rahul Gandhi India Lok Sabha Election 2024
By Jiyath May 23, 2024 07:52 AM GMT
Report

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  

ராகுல் காந்தி 

ஹரியானா மாநிலம் மகேந்தர்கரில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோடி கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கிழித்து குப்பையில் வீசப்படும் - ராகுல் காந்தி உறுதி! | We Will Tear Up The Agniveer Project Rahul Gandhi

இத்திட்டத்தை பிரதமர் அலுவலகம் உருவாக்கியதே தவிர ராணுவம் அல்ல. முதல் முறையாக இந்திய ராணுவ வீரர்களை தொழிலாளர்களாக மோடி மாற்றியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்து,

பாஜக அலுவலகம் முற்றுகை; வருவோருக்கு உணவும், பரிசும் - அண்ணாமலை அறிவிப்பு!

பாஜக அலுவலகம் முற்றுகை; வருவோருக்கு உணவும், பரிசும் - அண்ணாமலை அறிவிப்பு!

மீண்டும் மீண்டும் தள்ளுபடி

அவர்களின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதப்படுத்தப்படும். விவசாயிகள் தங்கள் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு மோடியிடம் ஒவ்வொரு முறையும் கேட்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் கிழித்து குப்பையில் வீசப்படும் - ராகுல் காந்தி உறுதி! | We Will Tear Up The Agniveer Project Rahul Gandhi

கேட்கும் ஒவ்வொரு முறையும், பிரதமர் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லுவார் தவிர செய்ய மாட்டார். ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அல்ல, மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப் போகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.