மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க.. கலைஞரின் நினைவு நாளில் வைரலாகும் உதயநிதி ட்விட்!

Udhayanidhi Stalin M Karunanidhi DMK
By Vidhya Senthil Aug 07, 2024 06:00 AM GMT
Report

தமிழக முன்னாள் முதலலமைச்சர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு விளையாட்டு துறை அமைச்சர் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார்.

 கலைஞர்

தமிழக முன்னாள் முதலலமைச்சர் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க.. கலைஞரின் நினைவு நாளில் வைரலாகும் உதயநிதி ட்விட்! | We Will Once Again Commit To Form A Dravida Model

இதைத்தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா சிலையில் இருந்து மெரினா வரை முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' சொல்லாகவும் - செயலாகவும் நம் நினைவெல்லாம் நிறைந்து, நாள்தோறும் வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று. மக்களிடையே வெறுப்பினை பரப்பியேனும் அரசியலில் பிழைத்திருக்க நினைப்போர் பலருண்டு;

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ!

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ!

 சமூக நீதி 

அன்பை மட்டுமே விதைத்து தமிழ்நாட்டு அரசியலைப் பிழைக்க வைத்தவர் நமது கலைஞர். கலைஞர் அவர்களின் தொலைநோக்கு, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒப்பீட்டு எல்லையை இந்திய ஒன்றியம் தாண்டி, உலக நாடுகள் வரை கொண்டு சேர்த்தது.

கலைஞர் அவர்களின் கொள்கை உறுதி, சமூக நீதி - மாநில சுயாட்சி - மொழி உரிமை எனும் தமிழ்நாட்டின் அரசியல் முழக்கத்தை, பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கச் செய்திருக்கிறது. ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் ; வளர்ச்சியை நோக்கிய நிர்வாகம் என திராவிட இயக்கக் கொள்கைகளின் வழியில் திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் நம் கலைஞர் அவர்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் உழைத்து, கழகத்தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க, இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.