9 இடங்களில் காங்கிரஸ் போட்டி.!! தமிழக காங்கிரஸ் நம்பிக்கை!! இசையுமா திமுக??
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
வரும் 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சியை மீண்டும் பிடித்திட பாஜகவும், 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிட காங்கிரஸ் கட்சியும் பெரும் முயற்சிகளை தற்போதே மேற்கொள்ள துவங்கி விட்டனர்.
காங்கிரஸ் கட்சி இது வரை இல்லாத அளவிற்கு பல மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராக இருக்கும் கட்சிகளை இணைத்து மிக பெரிய இந்தியா கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. இது முக்கியமாக தென் இந்தியாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
[HT9NNHL[
9 இடங்களை கேட்போம்
தமிழகத்தை பொறுத்த வரையில் இந்த தேர்தலில் திமுகவே பெரிய கட்சியாக நிற்கிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தமுள்ள 39 தொகுதிகளை கூட்டணிக்குள் சலசலப்புகள் இல்லாமல் பகிர்ந்து கொடுப்பதே திமுங்கவிற்கு தற்போது மிக பெரிய சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம், திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டனி 39 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெரும் என்று தெரிவித்ததுடன் கடந்த தேர்தலைபோல் 9 தொகுதிக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளது மேலும் திமுகவிற்கு நெருக்கடியை உருவாகும் என்றும் பேசப்படுகிறது.