மோடி தான் டாடி என இருக்கும் அதிமுக!! பிரச்னையே நாற்காலிதான்!! உதயநிதி ஸ்டாலின்!!
கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
கலைஞர் நூற்றாண்டு விழா
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா நகரில் நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
[9S2FG2
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், 2020-இல் இந்தியாவை தான் வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சொன்னதை குறிப்பிட்டு, இப்போது 2047-இல் வல்லரசாக மாற்றி காட்டுவேன் என்கிறார் என கூறியதை விமர்சித்தார்.
ஒரே ஒரு விஷத்தில் நாம் அவரை பாராட்டி ஆக வேண்டும் என குறிப்பிட்டு, இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய பிரதமர் இந்தியாவின் பெயரை மாற்றிவிட்டார். இங்குள்ள எதிர்க்கட்சி மக்கள் பிரச்னையை பற்றி பேசி உள்ளார்களா? என வினவி, அவர்களுக்கு பிரச்னையே நாற்காலிதான் என்று விமர்சித்து, கலைஞர் உடல்நிலையை முன் வைத்து இருக்கை வசதி கேட்டபோது, அதை செய்து கொடுக்காதவர்கள்தான் நாற்காலியை பற்றி பேசி வருகிறார்கள் என்றும் குறை கூறினார்.
மக்கள் ஏமாறமாட்டார்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தைரியமாக மோடியா? லேடியா? என்றார்கள். இப்பொது அடிமைகள் மோடிதான் எங்கள் டேடி என்றனர் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து, நீட், ஜிஎஸ்டி, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றிற்கு அதிமுக ஆதரவு அளித்ததை சுட்டிக்காட்டி, ஆனால் தற்போது தமிழ்நாட்டு உரிமையை காக்க கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக பொய் சொல்கிறார்கள் என்றார்.
தமிழக மக்கள் ஏமாறுவார்கள் என்று அதிமுக நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி அதிமுவும், பாஜகவும் ரெண்டுமே ஒன்றுதான் என்றும் தனியாக வந்தாலும் சரி, சேர்ந்து வந்தாலும் சரி வெல்லப்போவது திமுகதான் என உறுதிபட தெரிவித்தார்.