வயநாடு நிலச்சரிவு - வைரல் புகைப்படம்; இந்த மூவரும் உயிரோடு உள்ளார்களா? ஷாக் தகவல்!

Kerala India Viral Photos Death
By Swetha Aug 01, 2024 05:42 AM GMT
Report

வயநாடு நிலச்சரிவால் கொத்து கொத்தாக மக்கள் மண்ணில் புதைந்தது பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 வைரல் புகைப்படம்

கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

வயநாடு நிலச்சரிவு - வைரல் புகைப்படம்; இந்த மூவரும் உயிரோடு உள்ளார்களா? ஷாக் தகவல்! | Wayanad Viral Photo Are Those People Alive

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 163 மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.தொடர்ந்து ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை ஆகியவை களத்தில் இறங்கியுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு - தமிழக அரசு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!

வயநாடு நிலச்சரிவு - தமிழக அரசு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!

ஷாக் தகவல்!

இந்த நிலையில் தான் வயநாடு கொடூரத்தை வெளிக்கொண்டு வரும் வகையில் வெளியான ஒரு குடும்ப புகைப்படம் அணைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. பெரிய வீட்டின் உள்ளே பாறை வந்து மோதியதில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்பட்ட ஓட்டை,

வயநாடு நிலச்சரிவு - வைரல் புகைப்படம்; இந்த மூவரும் உயிரோடு உள்ளார்களா? ஷாக் தகவல்! | Wayanad Viral Photo Are Those People Alive

இதில் இருந்து சகதியாக காட்சியளிக்கும் வீடுகள் அதில் ஒரு கும்பம் அழகாக எடுத்துக்கொண்ட புகைப்படம், ஒரு சில இடங்களில் சகதி தெறித்து ஒட்டிக்கொண்டிருந்தது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களை கண்ணீரை வர வழைத்தது.

நிலச்சரிவில் சிக்கி இந்த 3 பேரும் இறந்து விட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. இந்த புகைப்படமும் வைரலானது. தற்போது அந்த 3 பேருடைய நிலை என்ன என்பதன் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நாங்கள் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், தனது இரண்டு சகோதரிகள் வெளியூரில் இருப்பதாகவும், தனது தாயுடன் தான் முகாமில் இருப்பதாக அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த தீரஜ் தெரிவித்துள்ளார்.