வயநாடு நிலச்சரிவு - தமிழக அரசு அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!
தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களுக்காக தமிழக அரசின் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 163 மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கேரளா வயநாட்டில் அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் - மண்ணில் புதைந்த 100'க்கும் மேற்பட்டோர் - 20 உடல்கள் மீட்பு!!
அவசர கால உதவி எண்கள்
தொடர்ந்து ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை ஆகியவை களத்தில் உள்ளன இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வயநாடு சுற்றுலா சென்றவர்களுக்காக தமிழக அரசின் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளா வயநாடு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். 1070 என்ற என்னை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை எந்த அழைப்புகளும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.