உரிமையாளரை தொலைத்த நாய்.. வயநாடு நிலச்சரிவில் ஒரு நாயின் பாசப்போராட்டம்!
வயநாடு நிலச்சரிவில் உரிமையாளரை தொலைத்த நாய் 6 நாட்களுக்குப் பின் கண்டுபிடித்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வயநாடு
கேரள மாநிலம் வயநாட்டி நள்ளிரவு 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சூரல்மலை, அட்டமலை, முண்டக்கை, நூல்புழா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டு 400 வீடுகள் மண்ணுக்குள் புகுந்தனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தில் 398 பேர் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து 7 வது நாளாக மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் விமானப் படையும், இந்திய ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு
மேலும் தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அது மட்டுமின்றி காணாமல் போனவரை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் உரிமையாளரை தொலைத்த நாய் 6 நாட்களுக்குப் பிறகு தனது வீட்டின் உரிமையாளரை கண்டுகொண்டது. அவர்களை பார்த்தவுடன் ஆனந்தத்தில் துள்ளி குடித்து அவர்களின் காலில் ஒட்டி கொண்டு முத்தமிட்டது . இந்த காட்சி இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.