வயநாடு நிலச்சரிவு; பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும் - ராகுல் காந்தி உறுதி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 வீடுகள் கட்டித்தரப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், வயநாடு மாவட்டம் முண்டக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மேப்படி சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. . 200 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
100 வீடுகள்
இந்த சுழலில், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மக்களைவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து 2-வது நாளாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார். இந்த நிலையில், வயநாட்டில் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "மிகவும் மோசமான பேரிடர் நிகழ்ந்துள்ளது. நேற்று முதல் நான் இங்கு இருக்கிறேன். நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து வயநாடு மாவட்ட நிர்வாகத்தினரிடமும், பஞ்சாயத்து நிர்வாகிகளுடனும் இன்று ஆலோசனை நடத்தினேன்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும். இதுபோன்ற மோசமான நிலையை கேரள மாநிலம் இதுவரை கண்டதில்லை. இதனை டெல்லியிலும், இங்குள்ள முதல் மந்திரியிடமும் எழுப்புவேன். இது வேறு நிலை சோகம். இதை வேறுவிதமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.