இந்திய பெருங்கடலுக்கு அடியில் ஓர் நீர்வீழ்ச்சி - ஆச்சர்யப்படுத்தும் அதிசயம்!

Africa
By Sumathi May 09, 2023 09:11 AM GMT
Report

நீருக்கடியில் இருக்கும் நீர்வீழ்ச்சி மக்களின் கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடலில் மொரிஷியஸின் தென்மேற்கு கடற்கரையில் தனித்துவமான நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இங்கு தண்ணீர் நடுவில் அலைகளை வெட்டி கீழே மூழ்குகிறது. அது எங்கு பாய்கிறது என்று இன்றளவும் தகவல் தெரியாத வண்ணம் உள்ளது.

இந்திய பெருங்கடலுக்கு அடியில் ஓர் நீர்வீழ்ச்சி - ஆச்சர்யப்படுத்தும் அதிசயம்! | Waterfall In Indian Ocean Near Mauritius

அதில் மணல் மற்றும் வண்டல் படிவதால், அற்புதமான காட்சியில் நீர் உள்ளே நுழைவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நிபுணர்கள், இது ஒரு ஒளியியல் மாயை. மணல் மற்றும் வண்டல் படிவத்தால், நீரின் நிறம் ஏற்ற இறக்கமாக இருப்பதால்,

நீர்வீழ்ச்சி?

அருவி போல் காட்சியளிக்கிறது அல்லது தண்ணீர் இழுத்துச் செல்வது போல் தெரிகிறது. இந்த நீர்வீழ்ச்சியைக் கரையிலிருந்து பார்க்க முடியாது. 500 மீட்டர் உயரமுள்ள Le Morne Braban சிகரத்திலிருந்து கூட ஒரு சிறிய பகுதி மட்டுமே தெரியும்.

அதனை காண பறக்க வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். முழுக்க முழுக்க வெள்ளை மணலால் நிரம்பியிருக்கும் இந்த கடற்கரை காண்போரைக் கவர்ந்துள்ளது.