மொத்தமா உறைஞ்சு போன நயாகரா நீர்வீழ்ச்சி - ஆட்டம் காட்டும் பனி சூறாவளி!
50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது.
பனிப்புயல்
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்திற்கும் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்திற்கும் இடையேயான எல்லையில் அமைந்துள்ளது நயாகரா நீர்வீழ்ச்சி. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு இடம்.
இது மூன்று நீர்வீழ்ச்சிகளைக் கொண்டது. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நயாகரா நீர்வீழ்ச்சி
கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது. போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியுள்ளது.
இதற்கிடையில், இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.