நெருங்கி வரும் தண்ணீர் தட்டுப்பாடு - தப்பிக்குமா சென்னை??
கோடை காலம் வந்துவிட்டாலே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு பெரும் இன்னலை மக்களுக்கு கொடுத்துவிடுகிறது.
கோடை காலம்
சென்னை மக்களை ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வகையில் வாட்டி வதைக்கிறது. மழை காலத்தில் பெருவெள்ளம், கொட்டி தீர்க்கும் மழை, கோடை காலத்தில் வெளியில் கூட வரமுடியாத அளவிற்கு கொடுமை செய்யும் வெயில் என இரண்டு காலமுமே மக்களுக்கு கொடுமையான விஷயம் தான்.
தற்போது துவங்கியுள்ள கோடை காலத்தின் வெயில் இப்போதே பல இடங்களில் சதம் அடித்துள்ளது. கோடை வெயிலையே தாங்க முடியாமல் மக்கள் இப்போதே வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து.வருகிறார்கள் வெயிலின் வெப்பலை காற்று அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையும் மக்களை வேகமாக நெருங்கி வருகின்றது.
ஏற்கனவே பெங்களூரு மாநகரம் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்து அங்குள்ள மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு சென்னையின் குடிநீர் ஆதாரம் என்பது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரிகளே.
இந்த ஏரிகளை மொத்தமாக சேர்த்து அவைகளின் மொத்த கொள்ளளவு 13.22 டி.எம்.சி. தற்போதைய சூழலில், இந்த 5 ஏரிகளையும் சேர்த்தே 7.1 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இது 1.4 டி.எம்.சி. தண்ணீர் குறைவாகும்.
இன்னும் அக்னி நட்சத்திர காலமே வராத நிலையில், வெயிலின் தாக்கம் எந்தளவிற்கு இருக்கும் என்பது தெரியாத சூழலில், தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.