டி-20யின் போது ஸ்டேடியத்தை பிய்த்துக் கொண்டு கொட்டிய மழை - ரசிகர்கள் அதிருப்தி! வைரலாகும் வீடியோ

Cricket India Indian Cricket Team South Africa
1 மாதம் முன்

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டி- 20 போட்டியின்போது ஸ்டேடியத்தின் கூரையைப் பிளந்துகொண்டு மழை நீர் கொட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இறுதி 20 ஓவர்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது.

டி-20யின் போது ஸ்டேடியத்தை பிய்த்துக் கொண்டு கொட்டிய மழை - ரசிகர்கள் அதிருப்தி! வைரலாகும் வீடியோ | Water Dripping From The Roof Rain During Match

முன்னதாக நடந்த முதல் 4 போட்டிகளில் இரண்டில் இந்தியாவும் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றதால் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படவிருந்தது. இதனால் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்கள் கூட்டம்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் போட்டி நடந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளும் விளையாட தயார் ஆன நிலையில், மற்றொரு புறம் மழை விளையாடத் தொடங்கியது. மழை வெளுத்து வாங்கியதால் தாமதமாகப் போட்டி தொடங்கப்பட்டது.

ஆனால் மீண்டும் மழை தாண்டவம் ஆடியதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு கோப்பை அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

 மழை நீர் 

இந்நிலையில், மழையின்போது பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தின் ஒரு பகுதி மேற்கூரையை உடைத்துக்கொண்டு மழை நீர் கொட்டியது. இருக்கைகளின்மீது மழை கொட்டியதால் அமர முடியாமல் ரசிகர்கள் திண்டாடினர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பரவிவருகிறது. டிக்கெட் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் பெறும் மைதான நிர்வாகம், சாதாரண மழைக்குக்கூட தாங்காத அளவுக்கா அரங்கத்தை வைத்திருப்பது என நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காட்டுக்குள் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்.. தாயும், சேயும் பலி!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.