சிறுவர்கள் ஆபாச படத்தாலோ அல்லது சேமித்து வைத்தாலோ..இதான் நடக்கும் - நீதிமன்றம் அதிரடி!
சிறுவர்கள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்த வழக்குக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சிறுவர்கள்..
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போனில் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம் என தீர்ப்பு அளித்தார்.
நீதிமன்றம்
அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் கூறியவதாவது, சிறுவர்களின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை ரத்து செய்கிறோம். ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது. சிறுவர்களின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான்.
குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஆபாச படத்தை சேமித்து வைத்தாலும், பார்த்தாலும் போக்சோ சட்டம் பாயும் என்று தெரிவித்துள்ளார்.