ஒரே ஆன்ட்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை - அந்த படத்தை 47 முறை பார்த்துள்ளாராம்!
ஒரே ஆன்ட்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சினிமா ஆர்வலர் ஒருவர்.
கின்னஸ் சாதனை
அமெரிக்காவை சேர்ந்தவர் 32 வயதான சாக்ஸ்வோப். சினிமா ஆர்வலரான இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு 2023 ஜூலை மாதம் வரையிலான ஒரு ஆண்டில் மொத்தம் 777 திரைப்படங்களை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் க்ரோன். அவர் கடந்த 2018ம் ஆண்டு 715 படங்கள் பார்த்து சாதனையை படைத்திருந்தார். இந்நிலையில் இந்த சாதனையை தற்போது சாக்ஸ்வோப் முறியடித்துள்ளார்.
சாக்ஸ்வோப் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ‘மினியன்ஸ்: ரைஸ் ஆப் க்ரு’ படத்தில் தொடங்கி ‘இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ வரை அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் பலதரப்பட்ட படங்களையும் பார்த்துள்ளார்.
எப்படி சாதித்தார்?
இந்த சாதனையை படைப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. அதில் "படம் பார்க்கும்போது மது அருந்தியிருக்க கூடாது, உணவு உட்கொள்ளக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகளை சாக்ஸ்வோப் பின்பற்றி வந்துள்ளார்.
இந்த விதிமுறைகளை இவர் தவறாமல் பின்பற்றுகிறாரா என்பதை தியேட்டர் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்துள்ளனர். ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 6.45 மணி முதல் மதியம் 2.45 வரை வேலைக்குச் செல்லும் சாக்ஸ்வோப் அதன்பிறகு தியேட்டருக்கு சென்று படங்கள் பார்த்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
சாக்ஸ்வோப் பார்த்த திரைப்படங்களில் அதிக முறை பார்த்தது புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ். இந்த படத்தை 47 முறை பார்த்துள்ளார். மேலும் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்' மற்றும் 'தி டெவில் கான்ஸ்பிரசி' போன்ற படங்களே சாக்ஸ்வோப்புக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள் ஆகும்.
இந்த கின்னஸ் சாதனையை குறித்தது சாக்ஸ்வோப் கூறுகையில் "ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்வோப் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், அவருக்கு அஸ்பெர்ஜர் எனப்படும் ஒரு வகையான மன இறுக்க நோய் பாதிப்பு இருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.