ஹீரோயினுக்கு கிளாமர்; ஆனா எனக்கு அந்தமாதிரியான ரோல் தான் வேணும் - நடிகர் அஜித் பளீச்!
நடிகர் அஜித் பிரபல தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
நடிகர் அஜித்
கடந்த 1993ம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் அஜித் குமார். இதுவரை 61 திரைப்படங்கள் நடித்திருக்கிறார். தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 1995ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் அஜித் பேட்டியளித்திருந்தார்.
அப்போது அவரிடம் "பெண் கலைஞர்களை எடுத்துக்கொண்டால் கிளாமராக நடித்து சினிமா துறையில் நிலைத்து நின்று விடுவார்கள். ஒரு ஆண் களைஞராக நீங்கள் என்ன செய்து இந்த துறையில் நிலைத்து நிற்கப்போகிறீர்கள்" என்று கேள்வி கேட்கப்பட்டது.
அஜித் பேட்டி
அதற்கு பதிலளித்த நடிகர் அஜித் "நீங்கள் சொல்வது போல் பெண் கலைஞர்கள் ஓரளவுக்கு கிளாமர் ரோல்ஸில் நடித்து சினிமா துறையில் நிலைக்கலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் ஆண் கலைஞர்களை பொறுத்த வரைக்கும், என்னைப் பொறுத்தவரையில் கிளாமர் எனும் பேச்சே கிடையாது. என்னைக் கேட்டால் ஆண் கலைஞர்கள் ஒரு அளவுக்கு வருவதற்கு நடிப்புதான் முக்கியம். அதே நேரத்தில் நடிப்பு என்றால் ஆக்ஷன் மட்டுமல்ல. நிறைய பேர் ஆக்ஷன்தான் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது உண்மையும் தான்.
ஆரம்ப கட்டத்தில் பிரபலமாவதற்கு ஆக்ஷன் முக்கியமானதுதான். ஆனால் வெர்சடாலிட்டி அதைவிட முக்கியம். ஒரு நடிகனாக நகைச்சுவையுடன் கூடிய ஆக்ஷன், அதுபோன்ற ரோல்கள் எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று அஜித் பேசியுள்ளார்.