அவர் மட்டும் ஆடினால் எல்லாமே குழம்பிவிடும்..அதை செய்யாதீங்க - எச்சரித்த முன்னாள் வீரர்!

Rohit Sharma Virat Kohli Indian Cricket Team Yashasvi Jaiswal T20 World Cup 2024
By Swetha Jun 17, 2024 10:00 AM GMT
Report

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

முன்னாள் வீரர்

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளை சந்திக்க உள்ளது. இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் நிலை கவலைக்குரியதாக உள்ளது.அதிலும் விராட் கோலி மூன்று போட்டிகளிலும் மிக சுமாரான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மட்டும் ஆடினால் எல்லாமே குழம்பிவிடும்..அதை செய்யாதீங்க - எச்சரித்த முன்னாள் வீரர்! | Wasim Jaffer Says Not To Change Batting Order Now

இதனால் வழக்கம் போல் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். எனவே, அவர் மூன்றாவது வரிசையில் களமிறங்க வேண்டும் எனவும், துவக்க வீரராக ஜெய்ஸ்வாலை சேர்க்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். ஒருவேளை இப்படி நடந்தால் ஏதேனும் ஒரு வீரரை அணியை விட்டு நீக்க வேண்டும்.

அதன் பின்பு பேட்டிங் ஆர்டரில் ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய மூன்று பேருக்கு பின் ரிஷப் பண்ட் நான்காவதாகவும், சூர்யகுமார் யாதவ் ஐந்தாவதாகவும் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தற்போது மூன்றாம் வரிசையில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சூப்பர் 8இல் மெகா ட்விஸ்ட் - இந்தியா ஆடும் அனைத்து போட்டிக்கும் ஆப்பு!

சூப்பர் 8இல் மெகா ட்விஸ்ட் - இந்தியா ஆடும் அனைத்து போட்டிக்கும் ஆப்பு!

 குழம்பிவிடும்..

வரிசையில் இடம் மாற்றினால் அவரது ஃபார்ம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பேட்டிங் ஆர்டரை மாற்றுவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் எச்சரித்து இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி துவக்க வீரர்களாக ஆடி வருகிறார்கள்.

அவர் மட்டும் ஆடினால் எல்லாமே குழம்பிவிடும்..அதை செய்யாதீங்க - எச்சரித்த முன்னாள் வீரர்! | Wasim Jaffer Says Not To Change Batting Order Now

அவர்கள் இருவரையும் இப்போது பிரிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி செய்தால் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் இருந்து நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லது அதற்கு கீழே அவர் பேட்டிங் செய்ய வேண்டும்.

சூர்யகுமார் யாதவ் நான்காம் வரிசையில் தான் பேட்டிங் ஆடுவார். எனவே, அது பேட்டிங் ஆர்டரில் குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.