சூப்பர் 8இல் மெகா ட்விஸ்ட் - இந்தியா ஆடும் அனைத்து போட்டிக்கும் ஆப்பு!
பெரும்பாலான போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மழை வாய்ப்பு
சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள நான்கு மைதானங்களில் நடைபெற உள்ளன. அதில் பார்போடோஸ் மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
அப்போது போட்டிகளின் போது 40 முதல் 55 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து, செயின்ட் லூசியா மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
அரை இறுதி?
இந்தியா - வங்கதேச போட்டி நடைபெற உள்ள அடுத்து ஆன்டிகுவா மைதானத்தில் 20 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட சூப்பர் 8 சுற்றின் 80 சதவீத போட்டிகள் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிகிறது. இதனால், போட்டிகள் கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
அவ்வாறு நடந்தால், ந்தியா., ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும்.
அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை முக்கிய அணிகள் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.