கருணாஸ் பட நாயகிக்கு பிடிவாரண்ட் - பிண்னனி என்ன?
சுயேட்சை எம்.பி.நவ்நீத் ராணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.நவ்நீத் ராணா
தமிழில் கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் அமராவதி தொகுதி சுயேட்சை எம்.பி. நவ்நீத் ரானா. இவர் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட போலி சான்றிதழ் பெற்றதாக மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தை ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிடிவாரண்ட்
அப்போது நவ்நீத் ரானாவுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என போலீஸார் கேட்டுள்ளணர். இதனை நிராகரித்த மாஜிஸ்திரேட்டு மோகாஷி, நவ்நீத் ரானா மற்றும் அவரது தந்தைக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத புதிய பிடிவாரண்டை பிறப்பித்தார்.

மேலும், அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.