பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம் - கருணாஸ் முடிவால் பரபரப்பு!
நடிகர் கருணாஸ் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், உண்ணாவிரதத்தை அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருபூஜை
ராமநாதபுரம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்.28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ஜெயந்தி விழா நடத்தப்படுவது வழக்கம்.
இதனால், அங்கு அரசியல் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்களை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாடானை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிறுவனருமான கருணாஸ் தேவர் ஜெயந்தி விழாவில் அன்னதான பந்தல் அமைத்துள்ளார்.
கருணாஸ் உண்ணாவிரதம்
அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் என்று பிரம்மாண்டகட் அவுட் ஒன்றும் வைத்துள்ளார். இதனை போலீஸார் அங்கிருந்து அகற்றியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
சிலரின் தூண்டுதலின் பேரில்தான் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, இதனை கண்டித்து சாகும்வரை உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.