தாக்குதல் எதிரொலி - வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது!
திருவாரூரில் வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் - டீசல் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை காந்திபுரம் வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மீதும் மர்ம நபர்கள் பாட்டில் குண்டு வீசினர்.
அடுத்தடுத்து நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் கோவை மாநகரில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
முக்கிய அறிவிப்பு
பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தும் தலைமைச் செயலாளர், பின்னர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், நகரம் முழுவதும் 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவாரூரில் வாட்டர் பாட்டில்களில் பெட்ரோல் - டீசல் வழங்க மறுப்பு தெரிவித்து அம்மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.