ரூ.10, ரூ.20 நாணயங்கள்..வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - நடத்துநர்களுக்கு எச்சரிக்கை

Tamil nadu
By Sumathi 1 வாரம் முன்

ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாணயங்கள்

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு பேருந்துகளில் டிக்கெட் வழங்கும்போது பயணிகள் அளிக்கும் ரூ.10, ரூ.20 நாணயங்களை நடத்துநர்கள் மறுக்காமல் பெற்றுக்கொண்டு உரிய பயணச்சீட்டு வழங்க வேண்டும்.

ரூ.10, ரூ.20 நாணயங்கள்..வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - நடத்துநர்களுக்கு எச்சரிக்கை | Warning To Bus Conductors Refuse To Buy Coins

நடத்துனர்கள் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுத்ததாக புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துநர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எச்சரிக்கை

அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில்

இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.