பேருந்து பயணம்: மாணவர்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு!
மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணம்
அனைத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு என தெரிவிக்கப்ட்டுள்ளது.
பேருந்து படிக்கட்டு பயணம் உள்ளிட்டவற்றை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பொறுப்பு
அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால் காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ அழைக்கலாம். மா.போ.க பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.