புத்தாண்டு கொண்டாட்டம் - கடற்கரை சொகுசு விடுதிகளுக்கு எச்சரிக்கை!
புத்தாண்டு முன்னிட்டு தமிழகத்தில் சொகுசு விடுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புத்தாண்டு
ஆண்டுதோறும் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பெரும் பங்கு வகிப்பது சொகுசு விடுதிகள். இதனால், சென்னை கடற்கரை பொழுதுபோக்கு விடுதிகள், சொகுசு ஹோட்டல்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
அதன்படி, தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அனைத்து விடுதிகளும் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாட்டு விதிமுறைகளும், வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டது. விடுதி நிர்வாகம், விருந்தினரின் அடையாள ஆவணத்தை, அவசியம் பதிய வேண்டும்.
விடுதிகளுக்கு எச்சரிக்கை
இரவில் நீச்சல் குள பகுதிகளில் அனுமதிக்கக் கூடாது. போதைப்பொருளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. விடுதி சோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து குழுவினர், திடீர் சோதனை நடத்துவர். போதைப்பொருள் பயன்பாடு இருப்பது தெரிந்தால்,
விடுதி நிர்வாகம் மீது, நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதியில் தங்கியிருந்த விருந்தினர், மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், விடுதி நிர்வாகமே பொறுப்பு. விடுதியில் அசம்பாவிதமோ, குற்றமோ நடந்தால், உடனே போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.