வெயில் காலங்களில் அதிக நேரம் ஏசியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குதான்
கோடை வெயில் காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் பலரும் வெப்பம் தாங்க முடியாமல் ஏசியை பயன்படுத்துகிறார்கள். வெப்பத்தை சமாளிக்க முடியாமல் சிலர் பகல் இரவு என்று ஏசியில் அமர்கிறார்கள்.
அப்படியாக, ஒருவர் இரவு பகல் என்று ஏசியில் இருந்தால் ஆரோக்கியத்தில் என்ன மாற்றங்கள் உண்டாகும் என்பதை பற்றி பார்ப்போம்.
இரவு பகல் என்று முழு நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சோர்வு மற்றும் மூட்டுகளில் விறைப்பு அல்லது கண் வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், ஏசியில் நீண்ட நேரம் அமர்வது எலும்புகளை சேதப்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.

முக்கியமாக ஏசியில் நாம் நீண்ட நேரம் இருப்பதால் தசை இறுக்கத்தையும் வலியையும் அதிகரித்து மூட்டு வலி உண்டாகலாம். ஆதலால் ஏசிக்கு அருகில் அதிக நேரம் அமர்வதை நாம் தவிர்க்க வேண்டும்.
அதோடு, தொடர்ச்சியான குளிர் காற்று உடலில் இயற்கையான செயல்பாடுகளை குறைப்பதோடு தசைகள் இருகுவதற்கும் காரணமாக அமைகிறது.
அதனால் ஏசியில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் ஏசியை பயன்படுத்தும் பொழுது நாம் அதனை நன்றாக சுத்தம் செய்துவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும்.

இல்லையென்றால் பில்டர்கள் மற்றும் குழாய்களில் இருந்து வரக்கூடிய அழுக்கு தூசி பாக்டீரியா போன்றவை காற்றோடு சேர்ந்து நமக்கு சுவாசப் பிரச்சனைகளை கொடுக்க நேரலாம்.
அதனால் ஏசியை பயன்படுத்தும் பொழுது குறைந்த வெப்ப நிலையில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏசியை 24-26 டிகிரி வெப்பநிலையில் பயன்படுத்துவது அவசியம் என்கிறார்கள்.
மேலும், ஆஸ்துமா சைனஸ் பிரச்சனைகள் ஒவ்வாமை உள்ளவர்கள் முதியவர்கள் முற்றிலும் ஏசி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய வாகன பாதுகாப்பு நிலையத்தில் அதிகரித்த கட்டணம் அறவீடு: பக்தர்கள் விசனம் IBC Tamil
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil