நடராஜனுக்கு தமிழில் வாழ்த்து கூறி அசத்திய டேவிட் வார்னர்
இந்திய வீரர் நடராஜனுக்கு தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் டேவிட் வார்னர். ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியவர் நடராஜன். டேவிட் வார்னர் தலைமையிலான இந்த அணியில் சிறப்பாக யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி வீரரை திணறடித்தவர் நடராஜன்.
தொடர்ந்து ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்து, மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி சாதனை படைத்தார். இந்நிலையில் நேற்று டேவிட் வார்னர் வெளியிட்ட வீடியோவில், ”வாழ்த்துக்கள் நட்டு” என தமிழில் தொடங்கினார். மேலும் நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன்.
களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்' என தெரிவித்தார்.
மின்சார கார் தீப்பிடித்ததில் குழந்தைகள் உட்பட 4 பேர் பலி: கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து IBC Tamil
அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் IBC Tamil