நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை - பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
நாடு முழுதும் நாளை போர் ஒத்திகை நடத்தும்படி, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
போர் பாதுகாப்பு ஒத்திகை
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், நாளை (மே 7ஆம் தேதி) அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ளும்படி மாநில தலைமைச் செயலாளர்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அப்போது, வான்வெளி தாக்குதல் முன்னெச்சரிக்கை கருவிகளின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுதல் கட்டுப்பாட்டு அறைகள், நிழல் கட்டுப்பாட்டு அறைகளின் செயல்பாடுகளை சோதித்து அறிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எதிரி விமானங்கள் குண்டு வீச வருவதை எச்சரிக்கும் சைரன் ஒலி கேட்டதும்,
அவசர உத்தரவு
பொதுமக்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லா வேலையையும் விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடி ஒளிய வேண்டும். சாலைகள், வீதிகளில் இருந்தால் சட்டென கீழே படுக்க வேண்டும். திடீர் முழு மின்தடை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாகவும் பயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், இந்த பயிற்சி பொது மக்களின் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியதாகவும், ஒருவேளை குடியிருப்புப் பகுதிகளில் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அப்போது தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்பதையும் பயிற்சியின்போது மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.