என்னை சுடுங்க.. ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பிராதீங்க - கதறும் பெண்

Pakistan India Jammu And Kashmir
By Sumathi Apr 28, 2025 12:30 PM GMT
Report

72 வயது மூதாட்டி ஒருவர் இந்தியாவை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா நடவடிக்கை 

ஒடிசா, பலசோர் மாவட்டத்தில் வசித்து வருபவர் 72 வயது பெண். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2023ல் கணவர் புற்றுநோயால் இறந்துள்ளார். இவரது அப்பா பீகாரை சேர்ந்தவர். இவர் வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானிற்கு இடம்பெயர்ந்துள்ளார்.

என்னை சுடுங்க.. ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பிராதீங்க - கதறும் பெண் | Pak Origin Woman In Odisha Request To Stay India

அப்போது பாகிஸ்தானில் இருக்கும்போது இந்த பெண் பிறந்ததால், பாகிஸ்தானியாக அறியப்படுகிறார். இந்நிலையில், பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலையொட்டி, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இங்கே தான் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்துள்ளேன். இங்கே தான் நான் சாக வேண்டும். இந்த வயதில் நான் ஏன் பாகிஸ்தான் செல்ல வேண்டும்? அந்த நாட்டிற்கு நான் இதுவரை சென்றதே இல்லை. நாங்கள் எதாவது தப்பு செய்திருந்தால், அரசாங்கம் எங்களை சுடட்டும்.

தாலி, பூநூலுக்கு தடை - ரயில்வேத் துறை தேர்வால் வெடித்த சர்ச்சை

தாலி, பூநூலுக்கு தடை - ரயில்வேத் துறை தேர்வால் வெடித்த சர்ச்சை

பெண்மணி கோரிக்கை

ஆனால், நாட்டை விட்டு வெளியேற மட்டும் சொல்ல வேண்டாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து இவர் தனது உடல்நிலை காரணங்களால் இங்கே சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே தங்களது தாயை இங்கேயே இருக்க செய்ய வேண்டும் என்று மகன்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்னை சுடுங்க.. ஆனால், பாகிஸ்தானுக்கு மட்டும் அனுப்பிராதீங்க - கதறும் பெண் | Pak Origin Woman In Odisha Request To Stay India

தற்போது இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "அரசாங்கம் எங்களுக்கு பிறப்பித்த உத்தரவுப்படி, அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்தியாவை விட்டு போக விரும்பதாவர்கள் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் அரசாங்கம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்கின்றனர்.