6 கிராமங்களை உரிமை கொண்டாடும் வக்பு வாரியம் - பரிதவிப்பில் மக்கள்!
திருச்சியில், 6 கிராமங்களை, வக்பு வாரியம் உரிமை கொண்டாடுவதால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வக்பு வாரியம்
வக்பு வாரியம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வக்பு வாரியம் தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18ம் தேதி,
வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் வந்துள்ளது.
6 கிராமங்கள்
அதில் குறிப்பிட்டுள்ளபடி, திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்பு வாரியத்தின் சொத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா,
திணறும் மக்கள்
ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், திருச்சி அருகே 6 கிராமங்களை வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ள தாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுங்கள் என்றும் கூறியுள்ளார்.