மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயிடம் பொய் சொல்லிவிட்டு திருச்சி சென்ற திருமாவளவன் ஏன் தெரியுமா?
திருச்சியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற தொல்.திருமாவளவன் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.
அவதுாறு கருத்து
அண்மையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, முகம்மது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இழிவான கருத்தை தெரிவித்திருந்தார்.
இது உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாஜக கட்சியில் இருந்து நுபுர் சர்மா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கவனஈர்ப்பு மாநாடு
அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் ஜமாத்துல் உலமா சபை கவனஈர்ப்பு மாநாட்டை நடத்தியது.
இதில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என்.நேரு மற்றும் எம்.பிகள் தொல்.திருமாவளவன்,வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அம்மாவிடம் பொய் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்
இதில் பேசிய விடுத்தலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான தொல்.திருமாவளவன், எதிர்பாராத வகையில் தாய்க்கு உடல் நலிவு ஏற்பட்ட நிலையில்,மருத்துவமனையில் இருக்க வேண்டிய நெருக்கடி திருச்சிக்கு செல்வதாக அவரிடத்தில் சொல்லாமல் சென்னையில் தான் இருக்கிறேன்.
வெளியில் ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு திருச்சிக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி,ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கான நிகழ்ச்சி,இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி.
இந்த தேசத்தை சனாதன கும்பலிடம் இருந்து மீட்பதற்கான ஒரு முயற்சி என்றார். மேலும் இது குறிப்பிட்ட சமூகத்தின்,மதத்தின் நிகழ்ச்சி என்பதை விட தேசத்தை பாதுகாப்பதற்காக ஓர் அறப்போர் என்கிற வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்றத்தில் பெருமைபடுவதாக கூறினார்.
கொள்கையை சொல்லி அணிதிரட்ட முடியாதவர்கள் ஒரு சமூகத்தின் வெறுப்பை சொல்லி இன்னொரு சமூகத்தை எதிர்மறை அடிப்படையில் அணி திரட்டுவது அவர்களின் அரசியல் உத்தியாக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.
யாரை பற்றி பேசினால் இஸ்லாமியர்கள் ரோட்டிற்கு வருவார்கள் என்று தெரிந்து தான் நபிகள் நாயகத்தை சீண்டுவதாக அவர் பேசினார்.