தமிழகத்தில் அதிகரிக்கும் வாக்கிங் நிமோனியா - யாரை பாதிக்கும்? அறிகுறிகள் என்ன?

Pneumonia Tamil nadu Doctors
By Karthikraja Dec 30, 2024 04:45 PM GMT
Report

 தமிழகத்தில் வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாக்கிங் நிமோனியா

குளிர்காலம் காரணமாக தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

வாக்கிங் நிமோனியா

இதனால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், வாக்கிங் நிமோனியா பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவா? சௌமியா சுவாமிநாதன் விளக்கம்

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவா? சௌமியா சுவாமிநாதன் விளக்கம்

அறிகுறிகள்

வாக்கிங் நிமோனியா என்பது தீவிரத் தன்மை குறைந்த நிமோனியா ஆகும். இது கடுமையான அறிகுறிகள் இல்லாமல், தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர அனுமதிப்பதால் "வாக்கிங்" நிமோனியா என அழைக்கப்படுகிறது. 

வாக்கிங் நிமோனியா

லேசான காய்ச்சல் மற்றும் குளிர், தொடர் இருமல், உடல் சோர்வு, தலைவலி தொண்டை வலி ஆகியவை இதன் அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம். குறிப்பாக 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். 

வாக்கிங் நிமோனியா

பொதுவாக வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்தே போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு அதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.