வெற்றியை கொண்டாட இந்தியா கூட்டணி காத்திருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி
டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இந்தியா கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில் ஒன்று கூடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.
காத்திருக்கிறோம்
கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம். தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்.
பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர். நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
