வெற்றியை கொண்டாட இந்தியா கூட்டணி காத்திருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu Lok Sabha Election 2024
By Jiyath Jun 03, 2024 04:50 PM GMT
Report

இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி

டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

வெற்றியை கொண்டாட இந்தியா கூட்டணி காத்திருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | Waititng For India Alliance Victory Says Mk Stalin

இதனை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இந்தியா கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில் ஒன்று கூடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினர்.

உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; சிறையில் நானும்.. - திகாருக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்!

உங்களை பார்த்துக்கொள்ளுங்கள்; சிறையில் நானும்.. - திகாருக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்!

காத்திருக்கிறோம்

கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம். தேசக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றிய கலைஞர், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர்.

வெற்றியை கொண்டாட இந்தியா கூட்டணி காத்திருக்கிறோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! | Waititng For India Alliance Victory Says Mk Stalin

பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர். நமது கூட்டணியின் வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.