எனக்கே அமலாக்கத்துறை ரைடு..டீ பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் - ராகுல் காந்தி!
டீ பிஸ்கட்டுடன் அமலாக்கத்துறை ரைடுக்கு காத்திருக்கிறேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை ரைடு..
ராகுல் காந்தி 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரை ஆற்றினார்.
அப்போது பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளம் வீரர் 6 பேர் கொண்ட சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டான். சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் சக்கர வியூகத்தை பத்ம வியூகம் என்றும் சொல்வதுண்டு.
இந்த 21-ம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார். அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே,
ராகுல் காந்தி
இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள். இந்த சக்கர வியூகத்தின் மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன்பகவத், அஜித்தோவல், அம்பானி, அதானி ஆகிய 6 பேர் உள்ளனர் என்று பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சக்கர வியூகம் பற்றிய தனது பேச்சுக்காக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிடுள்ள பதிவில்,
பாராளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அமலாக்கத்துறையினரின் வருகைக்காகத் திறந்த கரங்களுடனும், தேனீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Apparently, 2 in 1 didn’t like my Chakravyuh speech. ED ‘insiders’ tell me a raid is being planned.
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2024
Waiting with open arms @dir_ed…..Chai and biscuits on me.