அதிமுக ஒன்றிணையுமா..? Wait and See - சஸ்பென்ஸ் வைத்த செல்லூர் ராஜு!
திமுகவை அப்புறப்படுத்த மக்கள் தயாராக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜூ
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "எங்கள் பொதுச்செயலாளர் சாணக்கியர். 4 1/2 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தினார். பாரத பிரதமர் மோடியே தமிழக அரசை பாராட்டினார். பாராளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல.
Wait and See
காலம் மாறும், அதிமுக மீண்டும் அரியணை ஏறும். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவே தோற்றுள்ளனர். அதிமுக மாபெரும் வெற்றி பெறும். மக்கள் எங்கள் பக்கம். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவை அப்புறப்படுத்த மக்கள் தயார்.

2026-ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கிய தனத்தை பார்ப்பீர்கள்" என்றார். மேலும், அதிமுக ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு "Wait and See" என்று செல்லூர் ராஜு பதிலளித்தார்.
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan